அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது
முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமியின் 69வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் எஸ்.ஜெஸீம் தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட கவுன்சிலர் பேராசிரியர் இ.நீலபெருமாள், ஒன்றிய அவைத்தலைவர் பா.தம்பித்தங்கம், பொருளாளர் பாலமுருகன், பேரூர் செயலர்கள் எஸ்.எழிலன், ஆடிட்டர் சந்திரசேகரன், தாமரை தினேஷ், மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் பகவதியப்பன், லீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.