சிவகங்கையில்கொரானா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் கூறித்து சிவகங்கை நகராட்சி சார்பில் வெளியிட்ட விளம்பரத்தில் மோடியின் படம் இல்லாததை கண்டித்து பாஜகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரானா வைரஸ் தாக்குதலை கட்டுபடுத்த இந்திய மக்களுக்கு ஒன்றிய அரசு, மாநில அரசுகள் மூலமாக இலவசமாக தடுப்பூசியினை வழங்கி வருகிறது. சிவகங்கையில் கொரானா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து சிவகங்கை நகராட்சி சார்பில் வழங்கப்பட்ட நோட்டீஸில் பாரத பிரதமர் மோடியின் படத்தை அகற்றிவிட்டு அதில் முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் முதல்வர் ஸ்டாலின் படத்தை அச்சிட்டு, பொதுமக்களிடையே விளம்பரம் செய்யப்பட்டது.
இதற்கு சிவகங்கை மாவட்ட பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி தலைமையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராம் கனேஷிடம் மனு அளித்தனர். பின்னர் சிவகங்கை பேருந்து நிலையம் எதிரே சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். உடனடியாக பாரதப் பிரதமரின் படத்தினை அச்சிட்டு நோட்டீஸ் வழங்காவிட்டால் மாவட்டம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும் என சிவகங்கை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் மேப்பில் சக்தி தெரிவித்தார்.