பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட பிராணவாயு இயந்திரம் மற்றும் இரண்டாம் கட்ட மெகா தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். பின்னர் பொள்ளாச்சி அருகே உள்ள தமிழக கேரள எல்லைப் பகுதியான மீனாட்சிபுரம் பகுதி சோதனைச் சாவடிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர், கடந்த பத்தாண்டுகளாக யாருக்கும் பணி நியமனம், பணி நிரந்தரம் செய்யாமல் ஒப்பந்த அடிப்படையில் 30 ஆயிரம் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த பணியிடங்களை வரைமுறைப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.