

வரும் 2070ஆம் ஆண்டுக்குள் பூஜ்ஜியம் கரியமிலவாயு மாசு என்ற இலக்கை இந்தியா எட்டும் என காலநிலைமாற்றம் தொடர்பான ஐநாவின் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
கிளாஸ்கோவில் நடைபெற்றுவரும் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இந்தியா கடுமையாக போராடி வருவதாக அவர் சுட்டிக்காட்டினர். பாரிஸ் ஒப்பந்த்தில் அளித்த வாக்குறுதிகளின்படி செயல்பட்ட ஒரே பெரிய நாடு இந்தியாதான் என்றார்.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அவர் 5 வாக்குறுதிகளை அளித்தார். 2030ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் அளவுக்கு புதைபடிம எரிபொருள் அல்லாத வழிகளில் மின்சார உற்பத்தி திறன் பெருக்கப்படும் என அவர் கூறினார். 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது மின்சாரத் தேவையில் 50 சதவிகிதத்தை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் பெறும் என்றும், இப்போதிருந்து 2030-க்குள் இந்தியா தனது கரியமிலவாயு மாசை ஒரு பில்லியன் டன் அளாவுக்கு குறைக்கும் என்றும் குறிப்பிட்டார். பொருளாதாரத்தில் கார்பனின் பங்களிப்பை 45 சதவிகித அளவு இந்தியா குறைக்கும் என்றும் மோடி குறிப்பிட்டார். 2070ஆம் ஆண்டுக்குள் பூஜ்ஜ்யம் கரியமில வாயு மாசு என்ற இலங்கை அடையும் என்றும் அவர் தெரிவித்தார். மாசை குறைப்பதற்கு இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளையும் அவர் விரிவாக பட்டியலிட்டார்.
