

இந்திய-சீன எல்லைப் பகுதியில் மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அமைதியை ஏற்படுத்தும் வகையில் இருநாடுகளும் பல கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் இதுவரை பேச்சுவர்த்தையில் சமரசம் ஏற்படவில்லை. இரு நாடுகளும் எல்லையில் வீரர்களை குவித்து வைத்துள்ளன. அதாவது இரு படைகளும் தலா 50,000 முதல் 60,000 வீரர்களை எல்லைப்பகுதியில் நிறுத்தி வைத்துள்ளன.
இந்த நிலையில் இந்திய இராணுவம் கிழக்கு லடாக்கில் வான்வழி பயிற்சி மேற்கொண்டு வருகிறது. வான்வழியில் ஒருங்கிணைந்த போர் பயிற்சிகள், இயந்திரமயமாக்கப்பட்ட போர் நடவடிக்கைகள் மற்றும் தாக்குதல், ஹெலிகாப்டர்கள் ஆகியவை பயிற்சியின் பிரிவுகளில் ஒன்றாகும்.
இதன்மூலம், இந்திய ராணுவம் தனது போர்த் திறன்களை சீனாவுக்கு வான்வழி பயிற்சி மூலம் தெளிவாக நிரூபித்து வருகிறது. எல்லைப்பகுதிகளில் இந்திய இராணுவம் தனது படை வலிமையை அவ்வப்போது சீனாவுக்கு தெரியப்படுத்தி வருகிறது.
