• Fri. May 1st, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

அதிமுகவை நம்பி சிறுபான்மை மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள்..,

ByS.Ariyanayagam

Apr 20, 2026

அதிமுகவை நம்பி சிறுபான்மை மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள் என மனிதநேய மக்கள் கட்சி தலைமைக் கழகப் பேச்சாளர் கோவை செய்யது பேசினார்.
திண்டுக்கல்லில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த பிரச்சார கூட்டத்தில் திமுக வேட்பாளர் ஐ .பி.செந்தில்குமாருக்கு ஓட்டு கேட்டனர்.

அப்போது அவர் பேசியதாவது; உத்திரபிரதேசத்தில் ஏராளமான பள்ளிவாசல்களையும் மசூதிகளையும் இடித்து தள்ளியது பாஜக அரசு. சிறுபான்மை மக்களுக்கு தொடர்ந்து தொல்லை அளிக்கும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துக்கொண்டு சிறுபான்மை மக்கள் ஓட்டுக்களை எப்படி பெற முடியும். பாஜகவுடன் கூட்டணி வைத்து நாங்கள் போட்டியிட்டது போதும் நீ தனித்துதான் போட்டியிடுவோம் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆணித்தரமாக சொல்லி நாட்டை ஆளப்போவது மோடியா, லேடியா எனக் கேட்டார். ஆனால் பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த பழனிச்சாமி. எம்பி தேர்தலிலே இனி பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என கோஷமிட்டார்.

தற்போது மீண்டும் கூட்டணி வைத்துக் கொண்டு எங்கள் சமுதாய மக்களை நசுக்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். திருப்பரங்குன்றத்திலே ஒரு மணிப்புரை போல மாற்ற பாஜக முடிவு செய்து காய்களை நகர்த்தியது. சிறுபான்மை மக்கள் பொறுமையாக இருந்ததாலும், முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கையாலும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. எத்தனை முறை எங்களிடம் ஓட்டு கேட்டாலும், நாங்கள் அதிமுகவுக்கு ஓட்டு போட மாட்டோம். ஒற்றுமைக்கும் பிரிவினை வாதத்துக்கு நடக்கின்ற தேர்தல். இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் ஐ பி செந்தில்குமார் நிச்சயம் வெற்றி பெறுவார். இவ்வாறு அவர் பேசினார்.