• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

வெற்றி பெறும் கட்சியை தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் 1957 முதல் 2021 வரை நடந்த சட்டபேரவைத் தேர்தல்களில் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில்
எந்தக் கட்சி வெற்றி பெறுகிறதோ, அந்தக் கட்சி அல்லது அக்கட்சியின் கூட்டணித்
தலைமையே ஆட்சி அமைத்துள்ளன.

வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக சார்பில் போட்டியிடும் வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா எஸ்.டி.சாமிநாதனும், என்.டி.ஏ. கூட்டணி அதிமுக சார்பில் போட்டியிடும் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவமும் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் களத்தில் ஜெய்ப்பது நீயா? நானா? என்று இரு கட்சிகளும் ஒன்றோடு ஒன்று சளைக்காமல் மக்களை நேரடியாகச் சென்று வாக்கு கேட்டு தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

திமுக அல்லது அதிமுக இரு கட்சிகளின் வேட்பாளர்களில் ஒருவர்தான் வெற்றி பெறுவார்.

மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அக்கட்சியே ஆட்சியை பிடிக்கிறது என்ற கருத்து இருந்து வருகிறது. இதற்கு விடை தெரிய வாக்குப்பதிவு நடந்த பின்னர் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகுதான் தெரியவரும்.

அனைவரும் அதுவரை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.