• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

கண்மாயில் கழிவு பொருட்களை கொட்டிய டாட்டா ஏசி வாகனத்தை சிறை பிடித்த கிராம மக்கள்..,

ByP.Thangapandi

Aug 5, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டி கண்மாய் சுமார் 23.29 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது.,

இந்த கண்மாய் 58 கால்வாய் மூலம் நீர்ப்பாசனம் பெறும் கண்மாயாகவும் இப்பகுதி மக்களின் விவசாய மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.,

இந்நிலையில் உசிலம்பட்டி பகுதியில் உள்ள கோழிக்கடை கழிவுகள், மண்டப கழிவுகள், குப்பைகளை இரவு நேரங்களில் மர்ம நபர்கள் கொட்டிவிட்டு செல்வதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்துடன் சென்று வருவதாக கூறப்படுகிறது.,

இது குறித்து பல முறை மாதாந்திர நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கழிவுகள், குப்பைகள் கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.,

இந்நிலையில் 58 கிராம பாசன விவசாய சங்கத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் இணைந்து அதிகாரிகள் அனுமதியுடன் ஜேசிபி இயந்திரம் மூலம் சீரமைப்பு பணியினை கடந்த 4 நாட்களுக்கு முன்பு பூஜைகள் செய்து தொடங்கினர்.,

இந்நிலையில் சீரமைப்புச் செய்து வரும் கண்மாயில் மங்கள்ரேவு என்ற இடத்தில் இருந்து பழைய துணிகள், அட்டைப்பெட்டிகள் உள்ளிட்ட வீட்டின் கழிவு பொருட்களை கொட்டிய டாடா ஏசி வாகனத்தை சிறை பிடித்த கிராம மக்கள் மற்றும் விவசாய சங்கத்தினர் காவல்துறையிடம் ஒப்படைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.,

இதுகுறித்து உசிலம்பட்டி தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.,