• Fri. Mar 29th, 2024

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

ByA.Tamilselvan

Jun 13, 2022

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள வீர வசந்தராயர் மண்டபத்தில் கடந்து 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 2ல் தீ விபத்து ஏற்பட்டு மண்டபம் முழுவதும் சேதமடைந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 10ஆம் தேதி தமிழக முதல்வர் காணொளிகள் வாயிலாக சீரமைப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி இருந்தார் .


இந்த நிலையில் வீர வசந்த ராயர் மண்டபம் மறுசீரமைப்பு பணிகள் நடைமுறை சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மூன்று ஆண்டுகளுக்குள் பணிகளை முடிக்க துரிதப்படுத்த வேண்டும்.


மேலும் வீர வசந்த ராயர் மண்டபம் மறுசீரமைப்புக்கு 3000 கற்கள் தேவைப்படும் நிலையில் இருபத்தி எட்டு கற்கள் மட்டுமே வெட்டி எடுக்கப் பட்டுள்ள நிலையில் நடப்பு மாதத்திற்குள் 250 கற்களை சேமித்து வைக்க வேண்டும் எனவும் பணிகளை விரைந்து துவங்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதில் வணிகவரி மற்றும் பத்திரப் துறை அமைச்சர் மூர்த்தி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஸ் சேகர்,மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் உடன் இருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *