அதிமுக பொதுக்குழு வழக்கில் மேல்முறையீடு செய்ய ஓபிஎஸ் தாமதிப்பது ஏன் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக பொதுக்குழு வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் நேற்றே உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்வார் என்று கூறப்பட்டது. ஆனால் இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை. இதற்கு முக்கிய காரணம் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வலுவாக உள்ளதாம். இதனால் அதில் இருக்கும் ஓட்டைகளை ஓபிஎஸ் வழக்கறிஞர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். உச்சநீதிமன்றம் தான் கடைசி வாய்ப்பு என்பதால் இந்த முறை தெளிவாக இறங்க ஓபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.