அலங்காநல்லூர் அருகே கோவிலூரில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அமமுக சார்பில் மரியாதை செய்யப்பட்டது.
மதுரை மாவட்டம் முன்னாள் தமிழக முதல்வர் புரட்சித் தலைவர்எம்ஜிஆர் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க மதுரை புறநகர் மாவட்டம் அலங்காநல்லூர் கிழக்கு மேற்கு ஒன்றிய கழகம் சார்பாக, அலங்காநல்லூர் அருகே கோவிலூர் கிராமத்தில் உள்ள எம்ஜிஆரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி மன்ற குழு தலைவரும். மாவட்ட கழகச் செயலாளருமான கா.டேவிட் அண்ணாதுரை மற்றும் அமைப்புச் செயலாளர் மேலூர். செ. சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை சோழவந்தான் தொகுதி அலங்காநல்லூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர்கள் கோடீஸ்வரன் ரகு அலங்காநல்லூர் பேரூர் செயலாளர் ராஜ பிரபு பாலமேடு பேரூர் செயலாளர் மற்றும் அலங்காநல்லூர் கிழக்கு மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
எம்ஜிஆர் சிலைக்கு அமமுக சார்பில் மரியாதை
