அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், உள்ளிட்ட பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து வந்த தியாகராஜன், 1983ம் ஆண்டு ஹீரோவாக இவர் நடிப்பில் வெளியான மலையூர் மம்பட்டியான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதே படத்தை மகன் பிரசாந்தை வைத்து ரீமேக்கும் செய்திருந்தார்.
பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த அந்தாதூன் திரைப்படம் மலையாளத்தில் பிருத்விராஜ் நடிப்பில் பிரம்மம் என வெளியானது. அதே திரைப்படம் தமிழில் அந்தகன் எனும் பெயரில் உருவாகி வருகிறது. மோகன் ராஜா இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் அந்த படத்தில் இருந்து வெளியேறினார். பின்னர் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய பிரெட்ரிக் அந்தகன் படத்தை இயக்கி வந்த நிலையில், மீண்டும் சில பிரச்சனைகள் நடக்க அவரும் படத்தில் இருந்து வெளியேறினார். கடைசியாக படத்தை நானே இயக்குகிறேன் என தியாகராஜன் அந்தகன் படத்தை இயக்கி உள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் ஆன்லைன் சேனலுக்கு அளித்த பேட்டியில் சில்க் ஸ்மிதா பற்றி சில சுவாரஸ்ய விஷயங்களை பேசியுள்ளார்!
‘அலைகள் ஓய்வதில்லை படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட எம்ஜிஆர், சில்க் ஸ்மிதாவிடம் நீங்கள் நல்ல ஆர்ட்டிஸ்ட், நல்ல குணசித்திர நடிகையாக பல படங்களில் நடிக்கலாமே எனக் கேட்டார். ஆனால், சில்க் ஸ்மிதா நடனத்தை சினிமாவில் முன்னெடுத்து பல நடிகர்கள் படங்களிலும் சில்க் ஸ்மிதா இல்லாத நிலை இருக்க வேண்டும் என எண்ணினார்’, என்றார்!