• Wed. Dec 11th, 2024

ஆர்.ஆர்.ஆர் நடிகர்களுக்கு பிடித்த தமிழ் இயக்குனர்?

ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் இருவரும் தற்போது “ஆர்ஆர்ஆர்” என்ற பிரமாண்ட திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளனர். மிக பிரம்மாண்டமாக இந்த படம் வெளியாகவுள்ளதால் அனைத்து தரப்பு ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் விழாவில் கலந்து கொண்ட ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரனிடம் தமிழில் எந்த இயக்குனர் படத்தில் நடிக்க ஆசை என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது…அதற்கு பதிலளித்த இருவரும் ” வெற்றிமாறன் சார் படத்தில் நடிக்கவேண்டும்…கமர்ஷியல் கதையை மிகவும் சிறப்பாக இயக்குகிறார்..அசுரன் திரைப்படத்தை பார்த்து மிரண்டு விட்டோம்..நாங்கள் தமிழில் படம் நடித்தால் அது நிச்சயம் வெற்றிமாறன் இயக்கும் திரைப்படமாகத்தான் இருக்கும்” என கூறியுள்ளனர்.