



உசிலம்பட்டி தலைமை காவலருக்கு குடியரசு தின நாளில் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி மாவட்ட ஆட்சி தலைவர் கௌரவித்தார்.
நேற்று நடைபெற்ற நாட்டின் 76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையம் தலைமை காவலர் தினேஷ் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்து 2025 ஆண்டுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா வழங்கி கௌரவித்தார். இதற்கு உசிலம்பட்டி பகுதியில் மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



