
மயிலாடுதுறை அருகே குச்சிபாளையம் கிராமத்தில் இரண்டு மாதத்திற்கு மேலாக குடிநீர் தட்டுப்பாடு,கண்டித்து மீண்டும் இரண்டாவது முறையாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆணைமேலகரம் ஊராட்சியில் குச்சிபாளையம் கிராமம் இருந்துள்ளது. இங்கே 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் வினியோகம் தடைப்பட்டுள்ளது.இதன் காரணமாக சுத்திகரிக்கப்படாத நிலத்தடி நீரை குடிநீராக பொதுமக்கள் பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய அலுவலகத்திற்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனை கண்டித்து இன்றைய பொதுமக்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து மயிலாடுதுறை கும்பகோணம் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டியதை அடுத்து போராட்டக்களத்தில் இருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
