எடப்பாடி அருகே புதுப்பட்டி வால்மீகி அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற மாபெரும் மருத்துவம் மற்றும் ஆலோசனை முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே புதுப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பொதுமக்களின் நலன்கருதி வால்மீகி அறக்கட்டளை சார்பில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாம் புதுப்பட்டி, பாவாயி காட்டுவளவு பகுதியிலுள்ள ரைஸ்மில்லில் நடைப்பெற்றது.
இந்த மருத்துவ முகாமில் மூளை, தண்டுவடம் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் பிரபு தலைமையில் மருத்துவர்கள் குழு கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உடல் பரிசோதனை மற்றும் ஆலோசனையை தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.