மதுரையில் நான்கு நாட்களுக்குப் பிறகு மதுபான கடைகள் இன்று திறக்கப்பட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனையடுத்து மதுரை மாவட்டம் துவரிமான் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான கேசவன் என்ற நபர் மதுபோதையில் தனது இருசக்கர வாகனத்தில் பெரியார் பேருந்து நிலையத்தை நோக்கி வந்துகொண்டிருந்தபோது பெரியார் மேம்பாலத்தில் வேகமாக வந்துள்ளார். இந்த நிலையில் முன்னே சென்ற அரசு பேருந்து திடீரென பிரேக் பிடித்ததை தொடர்ந்து கேசவன் அரசு பேருந்தின் பின்பக்கத்தில் மோதியதால் விபத்து ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக கேசவன் உயிர் தப்பினார்.
தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.