• Fri. Apr 19th, 2024

மஞ்சுவிரட்டு, எருது விடும் திருவிழாவிற்கு தனி விதிமுறைகள் வேண்டும்- ஜல்லிக்கட்டு பேரவை தலைவர்

Byகுமார்

Dec 20, 2021

மஞ்சுவிரட்டு, எருது விடும் திருவிழா போன்றவற்றிற்கு தனி விதிமுறைகளை அமைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளுடன் இணைக்க வேண்டும் என ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பி. ராஜசேகர் தமிழக அரசுக்கு கோரிக்கை.

மதுரை கோமதிபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஜல்லிக்கட்டு பேரவையின் 15வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டுக் குழு கூட்டத்தின் இறுதியில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு மாநிலத் தலைவர் பி. ராஜசேகர் செய்தியாளரிடம் கூறியதாவது, ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு பல மாவட்டங்களில் காளைகளை வளர்க்க ஆர்வம் காட்டுகின்றனர்ஜல்லிக்கட்டு போட்டிகளில் அதிகமான கெடுபிடிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது ஆனால் காளைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது அனைத்து ஊர்களிலும் போட்டிகள் நடத்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.


அலங்காநல்லூர் போன்ற பிரசித்தி பெற்ற இடங்களில் காளைகளை அவளுக்கு அதிகம் பேர் ஆர்வம் காட்டுகின்றனர் அதுமட்டுமல்ல அது தவறான முறையில் அனுமதி அட்டையை பெற்றுக் கொண்டு வருவதனால் பலர் காலை அவிழ்க்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறதுஇந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் சரியான அளவு அனுமதி அட்டைகளை வழங்க வேண்டும் அனுமதி கிடைத்தவர்கள் மட்டும் பங்கேற்று மற்றவர்கள் கலந்துகொள்ள வேண்டாம் இதை மாவட்ட நிர்வாகம் இந்த ஆண்டு கடை பிடிக்கும் என நம்புகிறோம்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி எருது விடும் திருவிழா மஞ்சுவிரட்டு உள்ளிட்ட ஐந்து வகையான போட்டிகள் நடக்கின்றன ஆனால் ஜல்லிக்கட்டுக்கு மட்டுமே பார்வையாளர்களுக்கு பார்வையாளர்கள் அமர்ந்து பார்ப்பது காளைகளுக்கு உரிய பாதுகாப்பு வீரர்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட பல விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது மஞ்சுவிரட்டு எருது விடும் திருவிழா போன்றவற்றில் காளைகள் அவிழ்த்து விடுவது மட்டுமே போட்டி அதனை விரட்டி பிடித்து கொள்வார்கள் வீரர்கள் ஆனால் அதிகாரிகள் ஐந்திற்கும் ஒரே மாதிரியான நடைமுறை கடைபிடிப்பதால் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.


மஞ்சுவிரட்டு, எருது விடும் திருவிழா போன்றவற்றிற்கு தனி விதிமுறைகளை அமைத்து இவற்றுடன் இணைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்.
இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு பேரவையின் 15வது ஆண்டு விழா பொதுக் ஆண்டு விழா பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதில் 27 மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், மாடுபிடி வீரர்கள, காளை வளர்ப்போர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்து உள்ளனர் இதில் முதன்முதலாக ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை வந்தபொழுது 2008ஆம் ஆண்டு அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதி அவர்கள் தடையை விலகி போட்டிகளுக்கு அனுமதி பெற்றுத் தந்தார் அவரது புதல்வர் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் மற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் எங்களோடு உறுதுணையாக இருந்த அமைச்சர் மூர்த்தி, அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் இயற்றியுள்ளோம்.அதேபோல காலங்காலமாக பல ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் மஞ்சு விரட்டு போன்ற போட்டிகள் நடைபெற்று வந்தன இந்த போராட்டத்திற்கு பிறகு, அரசு விதிமுறைகள் ஏற்படுத்திய பிறகு பல ஊர்களின் பெயர்கள் அரசு அரசிதழில் சேர்க்கப்படவில்லை அவற்றை மாவட்ட நிர்வாகம் உடனடியாக சேர்த்து தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் மஞ்சுவிரட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என தீர்மானம் ஏற்றினோம்.சக்குடி போன்ற பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் கேட்கும்பொழுது அனுமதிக்காக சென்னை வரை சென்று வருவதற்கும் காலதாமதம் ஏற்படுகிறது எனவே இதுபோன்ற போட்டியில் நடத்த மாவட்ட நிர்வாகத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்.திருப்பூர் போன்ற இடநெருக்கடி உள்ள பல ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு இடம் கிடைக்காத நிலையில் அரசு இடத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அரசு அனுமதி வழங்க வேண்டும். தமிழக முதல்வர் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண வந்தால் வரவேற்போம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *