• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சாத்தூர் அருகே கிணற்றுக்குள் விழுந்த புள்ளி மானை மீட்ட தீயணைப்புத் துறையினர்…

ByK Kaliraj

Aug 26, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்னத்தம்பியாபுரம் கிராமத்தில் அருகே உள்ள காட்டு பகுதியில் புள்ளி மான்கள் இருக்கின்றன

இந்த நிலையில் ஆண் புள்ளிமான் ஒன்று காட்டுப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த நிலையில் புள்ளி மானை தெரு நாய்கள் விரட்டியதில் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள கிணற்றுக்குள் புள்ளிமான் தவறி விழுந்து உள்ளது.

இந்த நிலையில் புள்ளிமான் கிணற்றுக்குள் தவறி விழுந்ததை பார்த்த பொதுமக்கள் சாத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் விழுந்த புள்ளி மானை போராடி மீட்டனர்.

மேலும் கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட புள்ளி மானை தீயணைப்பு துறையினர் மீண்டும் காட்டுப் பகுதியில் விட்டனர்.