• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

சித்தன்னவாசல் அருகே கிடந்த இளைஞரின் சடலம்..,

Byமுகமதி

Aug 26, 2026

புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் அருகே நேற்று25.8.2026 மாலையில் அழுகிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடந்திருக்கிறது. அடர்ந்த காட்டுப்பகுதியில் கிடந்த அந்தச் சடலம் அடையாளம் காண முடியாத நிலையில் இருந்திருக்கிறது.

உடனடியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் ஒரு தகவல் அனுப்பி அண்மையில் ஒரு வாரத்திற்குள் காணாமல் போனவர்களின் பட்டியல் கேட்கப்பட்டது.

அப்போது புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் காவல் சரகத்துக்கு உட்பட்ட கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 42 வயதுடைய விஜயகுமார் என்பவர் கடந்த 22 ஆம் தேதி முதல் காணாமல் போய்விட்டார் என்று அவரது மனைவி ஆனந்தி புகார் கொடுத்திருந்தது தெரிய வந்தது. அப்போது அங்கு அடையாளங்கள் அணிந்திருந்த உடைகள் ஆகியவை குறித்து கேட்கப்பட்டபோது ஆம் அது அவராகத்தான் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அதற்குள் இரவு ஆகிவிட்டது.

அதனால் இறந்தவரின் உறவினர்களை இன்று வரச் சொல்லி உடலை அடையாளம் காட்டிய போது நாம் அவர்தான் என்று உறவினர்கள் அடையாளம் காட்டினார்கள். இது குறித்து வழக்கு பதிவு செய்த அன்னவாசல் போலீசார் விஜயகுமாரின் மனைவி ஆனந்தியிடம் விசாரித்த போது கடந்த ஒரு வார காலமாக இருவருக்கும் குடும்பச் சண்டை இருந்து வந்ததாகவும் அண்மைக்காலமாக விஜயகுமார் சற்று மனநலம் பாதித்தவராக இருந்து வந்ததாகவும் அதற்காக மாத்திரை உட்கொண்டு வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

அவர் சொன்ன தகவலின் அடிப்படையில் பார்த்தபோது விஜயகுமார் இறந்த இடத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உட்கொள்ளும் மாத்திரைகளும் விஷம் அருந்தியதற்கான விஷப்பாட்டிலும் கலர் பாட்டிலும் கிடந்திருக்கின்றன. அந்த வகையில் குடும்பச் சண்டை காரணமாக மனமுடைந்த விஜயகுமார் கொத்தமங்கலத்தில் இருந்து சித்தன்னவாசல் காட்டுப் பகுதிக்கு வந்து விஷம் அருந்தி இறந்திருக்கலாம் என்று கருதப்பட்டது.

பிரேத பரிசோதனைக்கு பிறகு விஜயகுமாரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு புதுக்கோட்டை போஸ் நகர் மின் மயானத்தில் அவரது உடல் எரியூட்டப்பட்டது. இது குறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகிறார்கள்.