• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாத சாமி கோவில் வருடாபிஷேக விழா..,

ByKalamegam Viswanathan

Aug 26, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாத சாமி கோவில் வருடாபிஷேக விழா நடைபெற்றது விழாவை முன்னிட்டு சாலை 9 மணி முதல் விக்னேஸ்வர பூஜையுடன் மகா யாகம் தொடங்கி நடைபெற்றது.

தொடர்ந்து அம்பாளுக்கு விசேஷ திரவியங்களால் அபிஷேகம் மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வருடாபிஷேக விழாவில் தென்கரை மற்றும் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிவாச்சாரியார் கண்ணன் என்ற பரசுராம் பட்டர் தலைமையில் அர்ச்சகர் செந்தில் குழுவினர் பூஜைகள் செய்தனர் விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் கோவில் பணியாளர்கள் வெங்கட்ரமணன் சேதுராமன் சங்கரன் அழகர்சாமி சந்திரன் ஆறுமுகம் செந்தில் சேகர் முருகன் திருப்பதி பால்பாண்டி திருக்கோவில் சீர்பாதம் உள்ளிட்ட விழா கமிட்டியினர் செய்திருந்தனர்