• Sat. Apr 20th, 2024

இருளில் மூழ்கிய மஞ்சூர் அரசு மருத்துவமனை

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிண்ணக்கெரை அப்பர் பவானி தாய் சோலை கேரன்டின் கோலட்டி மேல் குந்தா கூர்மையா புரம் போன்ற தொலைதூரப் பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றன 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.30க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் கொண்டதனி வார்டு அமைத்து நோயாளிகளுக்கு இரவு பகலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது மருத்துவமனையை சுற்றி தேயிலை தோட்டங்கள் வனப்பகுதி நிறைந்து காணப்படுவதால் வனவிலங்குகள் கரடி சிறுத்தை காட்டெருமை மான் போன்றவை மருத்துவமனை வளாகத்திற்குள் வந்து விடுகின்றன.

மருத்துவமனையில் கடந்த ஒரு மாத காலமாக புதிதாக அமைக்கப்பட்டு இருந்த இரண்டு ஐ மார்க்ஸ் எல் இ டி கம்பம் விளக்கு எரிவதில்லை மின் பழுது காரணமாக மருத்துவமனையில் ஆறுக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் பிரிண்டர்கள் எலக்ட்ரானிக்கல் பொருட்களும்பழுது ஏற்பட்டு வருகிறது.ஒரு மாத காலமாக மின் விளக்கு மற்றும் பழுதாகி உள்ள மின் கசிவுகளை சரி செய்யாமல் உள்ளதால் இரவு நேரம் முற்றிலும் இருட்டாக காட்சியளிக்கிறது வன விலங்குகள் அருகே இருந்தால் கூட தெரியாத வகையில் உள்ளதால் நோயாளிகளும் மருத்துவமனையில் பணியாற்றக்கூடிய மருத்துவர்களும் அச்சத்தில் உள்ளனர் பழுதாகி உள்ள மின்விளக்கு மற்றும் மின் கசிவை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் நோயாளிகளும் கோரிக்கை எடுத்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *