• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மஞ்சூரில் சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் எச் கே டிரஸ்ட்டில் அமரர் பி.கே.நந்தி கவுடர் நினைவு அறக்கட்டளையின் 17 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று மஞ்சூர் டிரஸ்ட் கட்டிடத்தில் நடைபெற்றது. அறக்கட்டளையின் தலைவர் கெட்சிகட்டி பலராமன் (காந்தி ) விழாவிற்கு தலைமை வகித்தார்,
செயலாளர் மணிக்கல் வாசுதேவன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். சமூக ஆர்வலரும் ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவரான லட்சுமணன் சிறப்புரை ஆற்றினார். ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் பொது மக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மதிப்பெண் முதன்மை பெற்ற சமுதாய மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மாற்றுத் திறனாளி மாணவர் அனீஷ்க்கு ரோட்டரி கிளப் ஆஃப் குந்தா சார்பில் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. பெயிண்டர் சந்திரன் நன்றி கூறினார்.