• Thu. Apr 25th, 2024

ராம்தேவை விமர்சித்த மஹூவா மொய்த்ரா

ByA.Tamilselvan

Nov 27, 2022

ஆடை அணியாவிட்டாலும் பெண்கள் அழகாக தெரிகிறார்கள் என்ற பாபா ராம் தேவின் சர்ச்சை பேச்சை
திரிணாமுல் கட்சியின் எம்.பி மஹுவா மொய்த்ரா கடுமையாக விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாபா ராம்தேவ், பெண்கள் புடவையில் அழகாக இருக்கிறார்கள். சல்வார் உடையிலும் அழகாக இருக்கிறார்கள். என் பார்வையில் அவர்கள் எதையும் அணியாவிட்டாலும் அழகாக இருக்கிறார்கள்" என்று பெண்களைப் பற்றி சர்ச்சைக்குரிய விதமாகப் பேசியிருக்கிறார். இத்தனைக்கும் அவர் இதைப் பேசும்போது, மகாராஷ்டிராவின் துணை முதல் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் மற்றும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகியோரும் மேடையில் இருந்தனர். இந்த நிலையில் பலரும் தற்போது பாபா ராம்தேவின் பேச்சுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். திரிணாமுல் கட்சியின் எம்.பி மஹுவா மொய்த்ரா, 2011-ல் பாபா ராம்தேவ் பெண்ணின் உடையில் தப்பிச் செல்ல முயன்றபோது போலீஸாரிடம் சிக்கிய சம்பவத்தைக் குறிப்பிட்டு,ராம்லீலா மைதானத்திலிருந்து பதஞ்சலி பாபா ஏன் பெண்களின் உடையில் ஓடினார் என்பது இப்போது எனக்குத் தெரிகிறது. அவர் புடவைகள், சல்வார்கள் மற்றும் … அவரின் மூளையில் ஒரு ஸ்ட்ராபிஸ்மஸ் (பார்வை ஒழுங்கற்றமைவு) தெளிவாக இருக்கிறது, அதுதான் அவரின் பார்வையை இப்படியாக்குகிறது” என விமர்சித்து ட்வீட் செய்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *