• Fri. Jul 24th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

திருநெல்வேலியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தங்கத்தேர் இழுத்து வழிபாடு

Byதரணி

Nov 28, 2022

உதயநிதிஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்யப்பட்டது.
திமுக மாநில இளைஞரணி செயலாளர் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் 46வது பிறந்த நாளில் திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர், விருதுநகர் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் கே. கே. எஸ். எஸ். ஆர்.ராமச்சந்திரன் ஆணைக்கிணங்கவும் , சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா,தென்காசி மாவட்ட திமுக வடக்கு மாவட்ட செயலாளர் அன்பு சார்பாகவும் தங்கத்தேர் இழுப்பதில் சிறப்பு அழைப்பாளராக பேராசிரியர் முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி கலந்துகொண்டு தங்கத்தேர் இழப்பதற்கு முன்பு செங்கோலை துவக்கி வைத்து. தங்க தேரை இழுத்து தொடங்கி வைத்தார் .


இந்நிகழ்ச்சியில் கோபி முன்னாள் கவுன்சிலர்பகுதி கழகச் செயலாளர், ராஜகோபால் ரதி நர்மதா சிட்பண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஏ.எல்.எஸ்.லட்சுமணன், தச்சை பகுதி செயலாளர் சுப்பிரமணியன்,பேட்டை பகுதி செயலாளர் நமச்சிவாயம். நிர்வாகிகள் அருண்குமார், பாஸ்கர், இசக்கி பாண்டியன்,ஆ.க.மணி உட்பட பலர் கலந்து கொண்டு தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர்.
முதல்வர் மு க ஸ்டாலின் குடும்பமும் துர்கா ஸ்டாலின் மற்றும் அவரது மருமகன் சபரீசன் குடும்பமும் உடல் ஆரோக்கியத்துடனும் செல்வ செழிப்புடனும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று தங்க தேர் இழுத்து வழிபாடு நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.