• Sun. Dec 4th, 2022

முதல்வர் பதவியில் அதிக நாட்கள்:
பினராயி விஜயன் புதிய சாதனை

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடது ஐக்கிய ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகியவை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறி மாறி ஆட்சி செய்து வந்தது. கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடது ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியை கைப்பற்றி காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 2016-ம் ஆண்டு முதல்-வர் பதவி வகித்து வந்த பினராயி விஜயனுக்கே மீண்டும் முதல்-வர் பதவி வழங்கப்பட்டது.
இதைதொடர்ந்து அவர் தொடர்ந்து முதல்-வராக பதவி வகித்து வருகிறார். தற்போது, பினராயி விஜயன் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். அதாவது கேரளாவில் அதிக நாட்கள் முதல்-வராக பதவி வகித்து வந்தவர் பட்டியலில் முதலிடத்தில் இருந்த முன்னாள் முதல்-வர் அச்சுதமேனனின் (2364 நாட்கள்) சாதனையை முறியடித்து, தொடர்ந்து 2365 நாட்களை கடந்து பினராயி விஜயன் பதவியில் நீடித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *