• Fri. Mar 29th, 2024

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு..!

ByA.Tamilselvan

Nov 15, 2022

சமீபத்தில் ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தியுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஜனவரி மாதம் அகவிலைப்படியை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது நாடு முழுவதும் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், அரசு ஊழியர்களின் சம்பளம் அமோகமாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது பணியாளர்களுக்கு 38 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது. . ஜூலை 2022 முதல் ஊழியர்கள் 38 சதவீத அகவிலைப்படியைப் பெறுகிறார்கள். மேலும், 2023 ஜனவரியில் 4 சதவீத அதிகரிப்பு இருக்கும் என்று நம்பப்படுகிறது. அதன் பிறகு ஊழியர்களின் சம்பளத்தில் பம்பர் அதிகரிப்பு இருக்கும். இந்த உயர்வுக்குப் பிறகு, அகவிலைப்படி 42 சதவீதமாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.
7வது ஊதியக்குழுவின்படி, மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆகவும், அதிகபட்ச அடிப்படை சம்பளம் ரூ.56,900 ஆகவும் உள்ளது. 38 சதவீத டிஏ உயர்வின்படி, ரூ.18,000 அடிப்படை சம்பளத்தில் ஆண்டு டிஏவின் மொத்த அதிகரிப்பு ரூ.6840 ஆக இருக்கும். மாத அதிகரிப்பு ரூ. 720 ஆக இருக்கும். அதிகபட்ச அடிப்படை சம்பளமான ரூ.56,900ல், ஆண்டு அகவிலைப்படியின் மொத்த அதிகரிப்பு ரூ.27,312 ஆக இருக்கும். மாதத்திற்கு ரூ.2276 அதிகரிப்பு இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *