தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை 100% வெற்றி பெற செய்ய வைக்கும் வகையில் 9 மாவட்டங்களிலும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கழக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தி ஆலோசனை வழங்கி வருகின்றார். இந்நிலையில் தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் கழக வேட்பாளர்கள் 100% வெற்றி பெறச்செய்ய செய்ய வைக்கும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை தேர்தல் பிரச்சாரம் செய்கின்றார்.
விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய மதுரையிலிருந்து விருதுநகர் மாவட்ட வழியாக வருகை தந்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமிக்கு விருதுநகர் மாவட்ட எல்லையான ஆவல் சூரங்குடியில் விருதுநகர் மாவட்ட அதிமுக கழகம் சார்பாக முன்னாள் அமைச்சர் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் கே.டி. ராஜேந்திரபாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.