• Sat. Jun 13th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

சென்னை திரும்பிய பீஸ்ட் படக்குவினர்

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு மற்றும் பலர் இணைந்து நடித்து வரும் படம் ‘பீஸ்ட்’ . அனிருத் இசையமைகிறார். இந்த படத்திற்கான ஷூட்டிங் கடந்த இரண்டு மாதங்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது.

மேலும், இம்மாத துவக்கத்தில் நான்காம் கட்டப் படப்பிடிப்பை சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் அமைக்கப்பட்ட அரங்கில் நடத்தினர் படக்குழுவினர்.

இதை முடித்துக்கொண்டு சண்டைக் காட்சிக்காக கடந்தவாரம் டெல்லி சென்றனர். அங்கு 5 நாட்கள் ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கத்தில் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், தற்போது டெல்லி படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனால், படக்குழுவினர் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியுள்ளனர்.

நடிகர் விஜய் சென்னை திரும்புவதற்காக டெல்லி விமான நிலையத்தில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.