

சிறையில் இருந்து வெளிவந்த சசிகலா அரசியலில் இருந்து விலகி இருப்பதாக அறித்தார். ஆனால் அவர் ‘தொண்டர்கள் மன வருத்தத்தில் இருப்பது புரிகிறது. விரைவில் நிர்வாகிகளைச் சந்திப்பேன். கட்சியை மீட்டெடுக்கலாம்’ என கொஞ்ச நாட்கள் முன்பு சசிகலா பேசிய ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் உலா வருவது வந்தது. அதுமட்டுமின்றி, பொன்விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட சசிகலா எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செய்தது மட்டுமின்றி கல்வெட்டு ஒன்றையும் திறந்து வைத்தார். அந்த கல்வெட்டில் ‘அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா’ என்று பெயர் பொறிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இது ஒரு பக்கமிருக்க, சமீபத்தில் ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி அவர்களுடன், ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் கலந்துகொள்ளவில்லை. அதுமட்டுமின்றி பல்வேறு கூட்டங்கள் கட்சி மாநாடுகள் போன்றவற்றிலும் இருவரும் ஒன்றாக பெரிதும் கலந்து கொள்ளுவதில்லை. அறிக்கைகள் கூட இருவரும் தனித்தனியாக தான் வெளியிட்டு வந்தனர்.
இந்த நிலையில், சசிகலாவிற்கும் அதிமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்த நிலையில், சசிகலாவை அதிமுகவில் இணைப்பது பற்றி தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என மதுரையில் ஒபிஎஸ் பேட்டி ஒன்றை அளித்தார்.
தற்போது, அதிமுகவில் மிகப்பெரிய திருப்பமாக சசிகலா தலைமை ஏற்பது என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் முடிவு எடுத்துள்ளார்.