சத்தியமங்கலம் அருகே புஞ்சை புளியம்பட்டி கோட்ட பாளையத்தில் சாராயம் விற்பனை செய்தவர் கைது
புஞ்சை புளியம்பட்டி அருகே கோட்டபாளையத்தில் கள்ள சாரய விற்பனைநடைபெறுவதாக புஞ்சை புளியம்பட்டி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)முருகேசன் சப் இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், ரபி, தனிபிரிவு காவலர் தங்கராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர் அப்போது கோட்ட பாளையம் குளியங்காட்டு தோட்டத்தைச் சேர்ந்த செந்தில் (42) என்பவர் சாராயம் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது இதனையடுத்து விற்பனைக்காக வைத்திருந்த 8 லிட்டர் கள்ள சாராயம் 200 லிட்டர் ஊறல் சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பாத்திரங்கள் மற்றும் மொபெட் ஆகியவற்றை பறிமுதல் செய்த புஞ்சை புளியம்பட்டி போலீசார் செந்தில் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் மேலும் சத்தியமங்கலம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் கைது செய்யப்பட்ட செந்தில் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது