• Fri. Apr 26th, 2024

பசி இல்லாத தமிழகம் உருவாக்குவோம்! – முதலமைச்சர் ஸ்டாலின்

Byமதி

Dec 12, 2021

சேலத்தில் நேற்று பல்வேறு நல திட்டங்களை துவக்கி வைத்தார் தமிழக முதல்வர். சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பிலான நலத் திட்டங்களையும், 30 ஆயிரம் மேற்பட்டோருக்கு பல்வேறு நல உதவிகளையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் திமுக தலைமையிலான தமிழக அரசு தலைவர் கலைஞர் அவர்கள் ‘சொன்னதை செய்வோம் செய்வதைச் சொல்வோம்’ என்பதற்கினங்க என்றைக்கும் அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்மை பயக்கக்கூடிய வகையில், வாக்களித்த மக்களுக்கும் வாக்களிக்காத மக்களுக்கும் அனைத்து திட்டங்களும் பாகுபாடு இன்றி நிறைவேற்றப்படும் என்றார்.

இன்னைக்கு மட்டும் 210 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு இருக்கிறது. அரசு துறைகளுக்கு 168 கோடிக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். திமுக ஆட்சியில் சேலம் மாநகராட்சிக்கு மேலும் பல பல புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்த முதலமைச்சர், அதனைக் பட்டியலிட்டார். இன்றைக்கு மட்டும் 261 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதன்படி சேலம் மாநகராட்சியில் பாதாள சாக்கடை இல்லாத பகுதிகளில் பாதாள சாக்கடை, போடிநாயக்கன்பட்டி ஏரி, மூக்கனேரி அல்லிக்குட்டை ஏரி போன்ற நீர் நிலைகள் ஏற்படுத்துவதற்காக 60 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். அம்மாபேட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம், விளையாட்டு வீரர்கள் பயன்பாட்டிற்காக 20 கோடி ரூபாய், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க 125 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கருப்புரில் உற்பத்தி மையம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

சில நாட்களுக்கு முன்னால் வறுமை குறைவான மாநிலங்களில் தமிழகம் 4வது இடத்தில் வகிப்பதாக ஒரு புள்ளிவிவரம் வெளியிடப்பட்டது. இந்த இடத்திற்கு தந்தை பெரியார் அண்ணா மற்றும் கலைஞர் காட்டிய வழிதான் என்பதை மறுக்க முடியாது என்றும் இந்த புள்ளிவிவரம் மகிழ்ச்சி அளித்தாலும் தனக்கு அது ஏற்புடையதாக இல்லை என்றும், தமிழ்நாட்டில் பசி என்பது இல்லை என்ற நிலையை உருவாக்கவும் வறுமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு முதலாவதாக இருக்கும் இந்த அடிப்படையில் இந்த அரசு முழு மகிழ்ச்சியோடு களத்தில் இறங்கியிருக்கிறது. உங்களுக்காக தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பேன் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *