அடுத்தாண்டு வடஇந்தியாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது.

இந்தநிலையில், கோவாவில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது கட்சியின் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
அப்போது அவர், கோவாவின் மோர்பிர்லா கிராமத்திற்குச் சென்று பெண்கள் மற்றும் பிற உள்ளூர் மக்களுடன் உரையாடினார். பாரம்பரிய நாட்டுப்புற நடனத்தில் பழங்குடியின பெண்களுடன் இணைந்தார் பிரியங்கா. கோவாவில் பெண் வாக்காளர்களை கவர முயற்சிக்கும் காங்கிரஸ் கட்சி, ஆட்சிக்கு வந்தால் வேலை வாய்ப்பில் 30% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.