திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சீலா தோரணம் மலைப்பாதையில் உள்ள பாறையில் சிறுத்தை ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்கள் சிறுத்தையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள், திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வனத்துறை மற்றும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் விரைந்து வந்தனர். அப்போது சிறுத்தை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது.
திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் அச்சமடைந்து உள்ளனர்.