• Fri. Apr 19th, 2024

பட்டேலுக்கு சிலை வைக்கலாம்; பெரியாருக்கு கூடாதா?.. கொளுத்திப்போட்ட முத்தரசன்!

By

Sep 8, 2021 , , ,
Mutharasan

கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த வேண்டாம் என அரசு அறிவித்துள்ளது, ஆனால் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை  இந்த பிரச்சினையில் அரசியல் செய்து ஆதாயம் தேட முயற்சிக்கிறார் என முத்தரசன் கடுமையாக சாடியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று கர்கோவில் வருகை தந்தார் அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

கொரோனா பரவல் காரணமாக  விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை  இந்த பிரச்சினையில் அரசியல் செய்து ஆதாயம் தேட முயற்சி செய்கிறார். நாடு முழுவதும் உள்ள மக்களின் சமூக நீதிக்காக போராடியவர் தந்தை பெரியார் அவருக்கு 100 அல்ல ஆயிரம் கோடி ரூபாய்க்கு வேண்டுமானாலும் சிலை வைக்கலாம் மத்திய அரசு பட்டேலுக்கு சிலை வைத்ததில் உள்நோக்கம் இருந்தது ஆனால் தமிழக அரசு அப்படியில்லை.

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இன்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக தகவல் தெரிகிறது இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  வரவேற்கிறது, மத்திய அரசின் புதிய வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது இது வரவேற்கத்தக்கது. வேளாண் சட்டத்திற்கு எதிராக வரும் 26 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ள பாரத் பந்த் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பங்கேற்கும் என அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *