• Thu. Mar 23rd, 2023

மத்திய அரசுக்கு எதிராக மு.க.ஸ்டாலினின் அடுத்த அதிரடி!

By

Sep 8, 2021 , , ,

தமிழக சட்டமன்றத்தில் காலை, மாலை என இரு வேளையாக துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று சட்டப்பேரவை குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்யக்கோரி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வந்தார்.

மத்திய அரசு 2019ம் ஆண்டு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டம் மதசார்பின்மை கோட்பாடு மத நல்லிணக்கத்திற்கு உகந்ததாக இல்லை என முதலமைச்சர் தனி தீர்மானத்தில் குறிப்பிட்டிருந்தார்.அகதிகளாக வருவோரை மதரீதியாக பாகுபடுத்திப் பார்க்கும் வகையில் சிஏஏ சட்டம் உள்ளதாக தீர்மானத்தில் குற்றம்சாட்டப்பட்டது. இந்திய நாட்டின் ஒற்றுமை மதநல்லிணக்கத்தை போற்றி பாதுகாக்க குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்தார். எனவே இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *