

நாம் செய்யும் அமல்களை பலமடங்காக்கும் நோம்புமாதமான ராமலான் மாதத்தின் 27 வது நாள் லைல்லத்துல் கத்ர் தான் சிறப்பு.

ரமலான் மாதத்தில் 27வது நாள் கொண்டாடப்படும் லைல்லத்துல் கத்ர் என்பது நாமகளில் மிகவும் புனிதமான நாளாகும். லைல் என்றால் இரவு, கத்ர் என்றால் சிறப்பு, கண்ணியம் என்று அர்த்தம். சிறப்பும் கண்ணியமும் மிகுந்த இந்த இரவே இஸ்லாமிய நாட்காட்டியின் புனிதமான இரவு.

ஆயிரம் மாதங்களுக்கும் மேலானதாகக் கருதப்படும் இந்த இரவில் செய்யப்படும் நன்மையின் பலன் பன்மடங்கு உயர்வானது.இன்று அந்தஇரவில் செய்யப்படும் அமல்களுக்கு ஆயிரம் மாதங்கள்அமல் செய்த கூலிகிடைக்கிறது.
இந்த இரவில்தான், இறைத்தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்களுக்குப் புனித குர்ஆனின் வசனங்கள் அருளப்பட்டன. ரமலான் மாதத்தின் கடைசி பத்து நாட்களில் வரும் ஒற்றைப்படை நாட்களின் இரவுகள் லைலத்துல் கத்ர் எனக் கருதப்படுகின்றன. இருப்பினும் பொதுவாக, புனித ரமலான் மாதத்தின் 27வது நாளே லைலத்துல் கத்ர் என உலகெங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது; கொண்டாடப்படுகிறது.

நோம்பு நாட்களில் இந்த இரவுக்குமட்டும் சிறப்பு இருக்கிறது. இந்த இரவில் தூக்கத்தைத் தவிர்த்து, திரு குர்ஆனை ஓதி, தொழுகையில் ஈடுபட்டு, இறை வழிபாட்டில் மூழ்கி, ஆன்மிகத்தில் திளைத்து, லயித்து இருப்பர். இந்த இரவில் மேற்கொள்ளப்படும் இத்தகைய வழிபாடு பாவங்களிலிருந்து விடுதலை அளிக்கும் என்பது நம்பிக்கை.இந்த இரவில் செய்யப்படும் செயல்களுக்கு பல மடங்கு நன்மை இருக்கிறது. எனவே தான் இந்த இரவில் நிறைய அமல்கள்செய்யவேண்டும். அமல் செய்யக்கூடிய நல்ல கிருபையை அல்லஹ் நமக்கு தந்தருள்புரிவார்.


இவ்வாறு மஸ்ஜிதே இப்றாகிம் ஜும்ஆ தொழுகை பள்ளிவாசல் ஆனையூர், மதுரை
முகமது ஷபிக் கூறியுள்ளார்.
