• Fri. Apr 26th, 2024

நடராஜர் அவமதிப்புக்கு யார் காரணம் ? பின்னணி தகவல்கள்

U2 Brutus என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் மனிதர் விஜய் என்பவர், தனது சேனலில் தொடர்ந்து பாதுகாக்க நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை விமர்சித்து அரசியல் நையாண்டியுடன் நிகழ்ச்சிகள் வெளியிட்டு வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் பிரச்சினை குறித்து வீடியோ வெளியிட்ட அவர் நடராஜப் பெருமான் காலை ஏன் தூக்கி வைத்து இருக்கிறார் என விளக்குவதாக ஒரு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் நடராஜர் குறித்து அவதூறாகவும், அவரது நடன அசைவுகள் குறித்து மிகவும் அசிங்கமான வார்த்தைகளில் கேவலமாக சித்தரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பக்தர்களின் மனதை புண்படுத்தக் கூடிய வகையில் காணொளி அவரது சேனலில் ஒளிபரப்பு செய்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

அந்த காணொளி பலதரப்பட்ட இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி இந்து மதத்தைச் சார்ந்த பல்வேறு கட்சியினர் காவல்துறையிடம் சம்பந்தப்பட்ட நபர் மீது புகார்களை கொடுத்து வந்தனர். மைனர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அந்த சேனலை முடக்கக் கோரி பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்ட பலரும், இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகளும் தமிழகம் முழுவதும் புகார் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்த யூடியூப் சேனலில் நடராஜர் குறித்து பேசியதற்கான அடிப்படை ஆதாரம் எது என்ற கேள்வி எழுகிறது.அந்த சேனலில் மேற்கோள் காட்டப்பட்ட புத்தகம் இந்து மதம் எங்கே செல்கிறது? இந்த புத்தகத்தினை எழுதியவர் அக்னிஹோத்திரம் இராமானுச தாத்தாச்சாரியார். இவர் ஒரு வைணவ வேத அறிஞர். நாதமுனியின் பரம்பரையில் கும்பகோணத்தில் பிறந்தவர். வேத கல்விக்கும், சமசுகிருத இலக்கியத்திற்கும் இவரது பங்களிப்பினைப் பாராட்டி, இந்திய அரசு இரண்டு தேசிய விருதுகளை வழங்கி பெருமைபடுத்தியது.

இவர் தான் எழுதிய இந்து மதம் எங்கே செல்கிறது என்ற புத்தகத்தில் நடராஜர் குறித்து சர்ச்சைக்குரிய வாக்கியங்கள் அதில் இடம் பெற்றுள்ளது

நடனம் அவருக்குள் கலவரம் செய்தது. ‘ஆஹா- சிவபெருமானை தில்லைகாளி ஜெயித்துவிட்டாளே’ என குரல்கள் கிளம்பப் போகிற நேரம். இனியும் இவளை ஆடவிடக்கூடாது என முடிவுகட்டிய சிவன்… தன் இடதுகாலை சற்றே தூக்கினார். நடனத்தில் ஒருவகைதான் என நினைத்து ஈடுகொடுத்து ஆடிக்கொண்டி ருந்தாள் காளி சிவனின் இடதுகால் இன்னும் எழும்பியது.ஆமாம். இன்னும் உயாமானது. கொஞ்சம் கொஞ்சமாக இடது காலை விலக்கி எடுத்துச் சென்ற சிவபெருமானின் திட்டம் பலித்தது. வலதுகாலை ஊன்றி இடதுகாலை உயர விலக்கிக்கொண்டே போக, சபையே ஒருகணம் அதிர்ந்தது. ஏன்? வேண்டுமென்றே சிவனின் சிஷ்டம் (அதாவது ஆணுறுப்பு) வெளியே தெரியும்படியானது. இதற்காகத்தான் இடதுகாலை விலக்கி தூக்கியிருக்கிறார் சிவன் வெற்றியின் விளிம்பில் நடனமாடிக்கொண்டிருந்த இல்லை காளி இக்காட்சியை பார்க்க வேண்டிய கட்டாயம் நேர்ந்துவிட்டது. பொட்டென அவளது நர்த்தனம் நின்றது. தலைகுளித்தான் தனக்கு முன் ஒரு ஆண் இப்படிப்பட்ட கோலத்தில் நிற்பதை எந்தவொரு பெண் பார்த்துக்கொண்டே தன் வேலையை தொடகுவாள்? காளியின் நர்த்தனம் நின்றதா? நிறுத்தப்பட்டது. ஆனால் சிவபெருமான். தொடர்ந்து தாண்டவமாடிக்கொண்டே இருந்தார். ஆக சிவன் ஜெயித்தார் என்றாகிவிட்டது. வ்லதுகாலை நன்றி இடது காலை தூக்கி சிஷ்டத்தை வெளிக்கொண்டுவந்து ஜெபித்துவிட்டாச் இதுதான் சிம்யூர்

இப்படி ஜெயித்த பிறகுநால் சிவனுக்கு நடராஜன் என்னும் நாமமே உண்டானது இதற்கு நடனத்தில் ராஜா என்று அர்த்தம் . இதை நானாக சொல்லவில்லை நடராஜ மகாத்மியம் என்னும் புஸ்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

மேற்கூறிய இந்த புத்தகத்தினை நக்கீரன் பதிப்பகம் வெளியிட்டிருந்தது. இதனை மேற்கோள் காட்டி தான் U2 Brutus என்ற யூடியூப் சேனலில் வீடியோ வெளிவந்துள்ளது. ஏற்கனவே கந்த சஷ்டி கவசம் குறித்து கறுப்பர் கூட்டம் என்ற சேனலில் வீடியோ ஒன்று வெளியாகி தமிழகத்தில் வேல் யாத்திரை வீட்டு முன் கந்த சஷ்டி கவசம் பிரயாணம் பண்ண வேண்டும் என்று வலது சாரி அமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். வெகுஜன மக்கள் நம்பிக்கை கொண்ட தெய்வத்தை ஆபாசமாக பேசியது தவறு.ஆனால் அதனை பயன்படுத்தி தமிழகத்தில் வட இந்தியாவை போல மாற்ற நினைத்தது தமிழகத்தில் பலிக்க வில்லை.

அதனை தொடர்ந்து தற்போது நடராஜர் குறித்து ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. இதற்கும் பல்வேறு இந்து அமைப்புகள் பலரும் முகநூலில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.ஆனால் உண்மை புத்தகத்தை எழுதியவர் குறித்து விமர்சனம் செய்யாமல் தவிர்ப்பது ஏற்புடையதாக இருக்குமா என்பது கேள்விக்குறி ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *