• Thu. Apr 25th, 2024

பெண் குழந்தைகளை தவறாக சித்தரிக்கும் ‘எனிமி’ திரைப்படத்தை தடைசெய்யக் கோரி சேலத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த வழக்கறிஞர்கள்..!

பெண் குழந்தைகளை தவறாக சித்தரித்து வெளியிடப்பட்டுள்ள எனிமி திரைப்படத்தை தடை செய்யக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியரிடம் வழக்கறிஞர் மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அகமது ஷாஜகான் என்பவர் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் சிறுமிகளை பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்துவது மற்றும் குழந்தைகளை கடத்தி துன்புறுத்துவது மேலும் வன்முறையை தூண்டி சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடச் செய்வது போன்ற காட்சிகள் எனிமி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த திரைப்படம் தமிழகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட்டு இருக்கும் நிலையில் தொடர்ந்து இத்திரைப்படத்தை ஒளிபரப்பினால் சிறுமிகள் பாலியல் வன்முறை மற்றும் சமூக விரோத செயல்களில் பொதுமக்கள் ஈடுபட வாய்ப்பு உள்ளது எனவும், நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தி பொது அமைதிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக காட்சியமைப்புகள் இடம்பெற்றுள்ளதாக திரைப்படத்தை தடை செய்யக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு அளித்தார்.

மேலும் இந்தத் திரைப்படத்தில் இயக்கிய இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவ்வாறு நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் நீதிமன்றத்துக்கு சென்று வழக்கு பதியப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *