தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கடை வீதியில் அமைந்துள்ள 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த, பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது,
இங்கு கடந்த வாரம் சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாக நடந்து முடிந்தது. இதனை அடுத்து மதுரை ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகை நிறுவனத்தின் சார்பாக பெண்களுக்கான திருவிளக்கு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது .இதனையடுத்து நேற்று 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்ட திருவிளக்கு பூஜை மிகவும் விமர்சையாக நடைபெற்றது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சமேத உற்சவர்கள் கொழுவில் வீற்றிருக்க, 500க்கும் மேற்பட்ட பெண்கள் பயபக்தியுடன் திருவிளக்கு வழிபாடு செய்தனர்.கொரோனா நோய் தொற்றிலிருந்து விடுபட்டு, உலக மக்கள் நலமோடு வாழ வேண்டியும் ,குடும்ப பிரச்சனைகள் நீங்கிட வேண்டியும், வீட்டில் சகல ஐஸ்வர்யங்கள் உடன் மகாலட்சுமி குடியேறி, நிம்மதி ,சந்தோஷம், உற்சாகம் நிறைந்திட வழிபாடு செய்யப்பட்டது. வந்திருந்த பெண்கள் அனைவருக்கும் மாங்கல்யம் ,குங்குமம் ,பிரசாதம் வழங்கப்பட்டது அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் தங்க லதா தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.