• Mon. May 6th, 2024

குன்னூர் – ஊட்டி சாலையில் மண் சரிவு : போக்குவரத்து நிறுத்தம்

Byவிஷா

Nov 23, 2023
கனமழை காரணமாக ஊட்டி - குன்னூர் சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.  
கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில்  ஏற்கனவே மண்சரிவு காரணமாக மலை ரயில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது குன்னூர் - ஊட்டி சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் இன்னும் அதிக மண்சரிவு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுவதால் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை மற்றும் குன்னூர் - ஊட்டி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் விரைவில் சாலை சரி செய்யப்பட்டு போக்குவரத்து அனுமதிக்கப்படும் என்றும்  கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *