கல்வி குழும பள்ளிகள், மதுரையில் இஸ்பெயினின் பிரபலமான லாலீகா அகாடமி இன்று தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினராக மிகுவேல் காசல், லாலீகா அகாடமி இந்திய பள்ளிகளின் தொழில்நுட்ப இயக்குநர் மற்றும் UEFA ப்ரோ லைசென்ஸ் கொண்ட முன்னணி பயிற்சியாளர் கலந்துகொண்டார். இவரது முன்னிலையில் லாலீகா அகாடமி மாணவர்களுக்கான அதிகாரப்பூர்வ டி-ஷர்ட் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் கார்த்திக் அருமுகம், இந்தியா ஆன்ட்ராக் நிறுவனத்தின் பிராந்திய தலைவர் மற்றும் தமிழ்நாடு மாநில தலைவர் கோகுல் பிரசாந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் தன்னிகரில்லா கால்பந்து பயிற்சியை உறுதிப்படுத்தும் நோக்கில் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
கல்வி குழும பள்ளிகளின் தலைவர் டாக்டர் செந்தில்குமார் சுப்பிரமணியன், மாணவர்களின் வளர்ச்சியில் விளையாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, கல்வி மற்றும் விளையாட்டு இணைந்த முறையில் கற்றல் பயணத்தை சிறப்பிக்க விரும்புவதாக தனது உரையில் தெரிவித்தார்.
இவ் விழாவின் முக்கிய அம்சமாக, லா லீகா அகாடமி பயிற்சியாளர்களின் மேற்பார்வையில் மாணவர்களுக்கு மைதானத்தில் விளையாட்டு பயிற்சி வழங்கப்பட்டது. இது மதுரை மற்றும் சுற்றுப்புற மாணவர்களுக்கு உலகத் தரத்தில் விளையாட்டு திறனை மேம்படுத்த சிறந்த வாய்ப்பை அளிக்க உள்ளது.