உசிலம்பட்டி அருகே கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமினை சீமானூத்து ஊராட்சிமன்ற தலைவர் அஜீத்பாண்டி குத்து விளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானூத்து ஊராட்சி மன்ற வளாகத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமினை தொட்டப்பநாயக்கனூர் அரசு ஆரம்ப சுகாதார வட்டார மருத்துவ அலுவலர் தெய்வகனி முன்னிலையில் சீமானூத்து ஊராட்சி மன்ற தலைவர் அஜித் பாண்டி குத்துவிளக்கு ஏற்றி வைத்து மருத்துவ முகாமில் துவக்கி வைத்தார்.
இதில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு , ரத்த பரிசோதனை, ஸ்கேன் மற்றும் பொது மருத்துவ முகாமில் சீமானூத்து மற்றும் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.