

பேரழகனே..,
எனது விரல்களை
இறுகப் பற்றிக் கொள்.
படபடக்கும் எனது உள்ளத்தின்
ஓசை
கேட்கிறதா உனக்கு?
எனது டெடிபியரின் மடியில்
தலைசாய்த்துப் படுத்துக் கிடக்கிறேன்.
கண்ணோரத்தில் வழியும்
எனது கண்ணீரின் வெப்பம்
சுடுகிறதா உன்னை?
சுடாது உன்னை ஏனெனில் உனக்கு
தான் என்மீது பற்றுதல் என்பதில்லையே
துர்கனவுகள்
விடாமல் துரத்துகின்றன.
எனது அலறலைச் செவிமடுக்கிறாயா?
நீ செவிசாய்க்க மாட்டாய்
தெரியும் எனக்கு
எனது நினைவுகள்
மழைக்காலத்தின் எறும்புகள் போல்
உனது இருப்பிடம் தேடி
அணிவகுத்து வருகின்றன.
காலவிரபம் என்பதை உணராமல்
நீ எங்கிருக்கிறாய்?
இந்த வாழ்வை அணைத்துக் கொள்ளும் பொருட்டு
செவிமடல் வருடும்
உனது விரல்களை
ஒருமுறை முத்தமிட வேண்டும்.
நான் கனவினில் மட்டுமாவது
அனுமதிப்பாயா??
என் விரல்களின் இடைவெளியில்
ஒளிந்திருக்கிறது என்னைக் கொல்லாமல் கொல்லும்
நம் பிரியம்.
என் பேரழகனே

கவிஞர் மேகலைமணியன்

