பேரழகனே..,
எத்தனை யுகங்கள்
கடந்தாலும்
மழை மழையாகவே
இருக்கிறது…
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
உன் மீதான எனது காதல்
ஈரமாகவே இருக்கும்
இந்த
மழையைப் போலவே
நீ என்னை விட்டு தூரத்தில் இருக்கிறாய்
பக்கம் வருவாயா எனத் தெரிந்து கொள்ள விருப்பம் இல்லை
ஆனால் எப்போதெல்லாம் மழை வருகிறதோ
அப்போதெல்லாம் என்னுடன் நனைய
வந்துவிடுகிறாய் என் மழையைப்போல
என் பேரழகனே
கவிஞர் மேகலைமணியன்