பேரழகனே..,
என் பேரன்பே உனக்காக
காத்திருப்பது கூட
ஒரு தவம் தானடா
நீ வந்தாலே எனக்கு அது ஒரு வரம்
தானடா
என் நினவுகளுக்குள்
புகுந்து கொண்டு
உன் எண்ணம் என்ற
தீயை நீ பற்ற வைக்கின்றாயடா
இருந்த போதிலும்
உன்னைப் பற்றிய
என் காதல் எனும் எண்ணமே
என்னைக் குளிர்விக்கிறதடா
எப்படியடா முடிகிறது
உன்னால் மட்டுமே
என்னை
ஒரே நேரத்தில்
சூரியனாக சுட்டெரிக்கவும்
சந்திரனாக குளிர்விக்கவும்!
என் பேரழகனே

கவிஞர் மேகலைமணியன்