• Thu. Apr 25th, 2024

கரூர் -கல்லாங்காடு வலசு அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழா

ByS.Navinsanjai

Feb 11, 2023

30 ஆண்டுகளுக்கு பின்னர் பல லட்சம் பொருட்கள் செலவில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி கல்லாங்காடு வலசு அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது .ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்..!!
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுக்கா மொடக்கூர் மேல்பாக்கம் கல்லாங்காடு வலசு அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் அருள்மிகு ஸ்ரீ வெள்ளை எருது பெருமாள்,அருள்மிகு ஸ்ரீ கன்னிமார் அருள்மிகு ஸ்ரீ கருப்பண்ண சுவாமிகள் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.விழா நடைபெற்ற கல்லாங்காடு வலசு என்ற பகுதியானது கடந்த 30 வருடங்களாக யாரும் குடி இல்லா வண்ணம் இருந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து அவ்வூரில் வசித்து வந்த பக்தரிடம் கனவில் தோன்றிய சுவாமி 30 வருடங்களுக்கு முன்பாக இருந்தவர்கள் ஊரை விட்டு சென்றதனால் அவ்வூரில் வசித்து வந்தவர்கள் தற்பொழுது வெளியூரில் அவதிப்பட்டு வருவதாகவும் சிரமத்திற்கு உள்ளாகியும் உடல் நோய் வாய்புற்றும் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகி வருவதாகவும் தெரிவித்தது. இதற்கு தீர்வாக அந்த ஊரில் 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவர்கள் கூடி அங்கு ஒரு கோயிலை கட்டி எனக்கு ஒரு வழிபாடு செய்தால் அப்பகுதியில் இருந்த மக்களுக்கு விமேசனம் கிடைக்கும் என கனவில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அப்பகுதியில் 30 ஆண்டுகளுக்கும் முன்னர் வசித்து வந்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு ஒரு கோவிலை கட்டி வந்துள்ளனர். இந்நிலையில் பல லட்சம் பொருட்செலவில் கோவிலின் கட்டிட வேலைகள் முடிந்து நேற்று மகா அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் அப்பகுதியில் வசித்து வந்த மக்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தனர். இந்நிகழ்ச்சியில் அன்னதானம், பிரசாதங்கள் உள்ளிட்டவை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவகளுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் முன்னதாக பல்வேறு புன்னிய தளங்களிலிருந்து தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டு கோவில் கோபுர கலசங்களின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து சுவாமிகளுக்கு கன்னி பூஜை,கோமாதா பூஜா,சிறப்பு யாகசாலை பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பிரசித்தி பெற்ற தேவராட்டம் நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *