• Tue. Feb 18th, 2025

குமரி மக்களுக்கு காவல்துறை விடுத்த எச்சரிக்கை!

By

Sep 9, 2021 ,

விநாயகர் சதுர்த்தி விழா சம்பந்தமாக தமிழக அரசின் ஆணைப்படி பொதுமக்கள் கொண்டாட வேண்டும் என குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்திரி நாராயணன் தெரிவித்துள்ளார்.

தனிநபர் வீடுகளில் இரண்டு அடி உயரம் வரை உள்ள விநாயகர் சிலையை வைத்து வழிபட எந்த தடையும் இல்லை என்றும், பொது மக்கள் அல்லது சிலர் குழுவாக இணைந்து விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் நீர் நிலைகளில் கரைக்க அனுமதி உள்ளது. ஆனால் கூட்டமாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர், இதை மீறும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இன்று இரவு முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார்.