• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

கண்ணகி கோயில் சித்திராபௌர்ணமி கொடியேற்றம்..,

கண்ணகி கோயில் சித்திராபௌர்ணமி விழா: கொடியேற்றம்.
தமிழக கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு, மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை மண்டப வளாகத்தில் விழாவிற்கான கொடிஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழக கேரள எல்லை பெரியாறு புலிகள் சரணாலயப்பகுதியிலுள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் வரும் மே 12 ஆம் தேதி சித்திரை முழுநிலவு விழா, மங்கலதேவி கண்ணகிவிழா, பூமாரிவிழா என முப்பெரும் விழா நடைபெறுகிறது. சித்திரை முழு நிலவு விழா துவக்கமாக இன்று கம்பம் நகரில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை மண்டப வளாகத்தில் திருவிழா கொடி ஏற்றம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் மு. ராஜேந்திரன் ஐஏஎஸ் திருவிழா கொடியை ஏற்றி வைத்தார்.

கொடியேற்ற நிகழ்ச்சியில் தேனி மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கே,ஆர் ஜெயபாண்டியன், அனைத்து செட்டியார் பேரவைகளின் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா, கூடலூர் செல்வேந்திரன், ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர் ரஞ்சித்குமார், சீர்மரபினர் நலச் சங்க வக்கீல் கௌதமன், நேதாஜி இளைஞர் மன்ற குழுவினர், தேனி மாவட்ட சிலம்பாட்ட கழக தலைவர் சிவாஜி மோகன் அவர்களின் தலைமையில் சிலம்பாட்ட குழுவினர், தேனி மாவட்ட வாணியர் சங்க பொருளாளர் சேகர் மற்றும் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை மகளிர் குழுவினர், பெருந்திரளாக கலந்து கொண்டனர். நாதஸ்வர இசை முழங்க கொடி ஏற்ற நிகழ்ச்சி வெகு சீரும் சிறப்புமாக நடைபெற்றது. மகளிர் அணியினர் பொங்கல் வைத்து கொடியேற்றிய நிகழ்ச்சியை சிறப்புற கொண்டாடினர்.

விழாவில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை செயலாளர் ராஜகணேசன் பொருளாளர் முருகன் தலைமையில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பஞ்சுராஜா, சரவணன், காசிராஜன், சுதாகர், ஈஸ்வரன் கருப்புசாமி, அய்யப்பன், ஏற்பாடு செய்து இருந்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையின் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது