• Wed. Dec 11th, 2024

‘நீட்’ தேர்வுக்கு எதிராக ஆதரவு திரட்டும் கனிமொழி!..

Byமதி

Oct 14, 2021

தமிழகத்தில் நீட் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியது. பல்வேறு உயிர்களையும் காவு வாங்கியது.

‘நீட்’ தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத 12 மாநிலங்களை ‘நீட்’ தேர்வுக்கு எதிராக ஒருங்கிணைக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு திரட்டும் வகையில் கடிதம் ஒன்றையும் எழுதினார்.

அந்தவகையில் தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி எழுதிய கடிதத்தையும், ‘நீட்’ தேர்வு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அளித்த அறிக்கையையும் வழங்கினார்.